மின்கட்டண பில் புத்தகங்களும் தீர்ந்து விட்டதாம்! வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரசீதுகளே விநியோகம்

இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணப் பட்டியல்களுக்குப் பதிலாக தற்போது சிறிய ரசீதை வழங்கி வருகிறது.

இதற்குக் காரணம், பழைய பில் புத்தகங்கள் காலாவதியாகி விட்டதாகவும், புதிய பில் இன்னும் வரவில்லை என்றும் மானி வாசிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான காகித இறக்குமதிக்குரிய அந்நியச் செலாவணி இல்லாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply