முதலீட்டுச் சபைக்குட்பட்ட வர்த்தக வலயங்களுக்கு மின்வெட்டு இல்லை!

முதலீட்டுச் சபைக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபையின் கீழ் இலங்கையில் 14 வர்த்தக வலயங்கள் அமுல்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் மின்வெட்டு காரணமாக உற்பத்தியைத் தொடர முடியாதுள்ளதாகவும் அந்தந்த வர்த்தக வலயங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வதை நிறுத்தினால், வருடாந்தம் சுமார் 800,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்து காரணிகளையும் பரிசீலித்த மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முதலீட்டு சபை வர்த்தக வலயங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தற்போதைய மின்வெட்டை நீடிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply