ஜனாதிபதி செயலகம் முற்றுகை! – முடங்கியது காலி முகத்திடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகை தந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆர்;ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, ஜனாதிபதி செயலகத்தை சூழ அதிவுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்;குள் பிரவேசிக்க முயற்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *