நிலையானதொரு பொருளாதார திட்டம் அரசுக்குஅவசியம்: ஜீவன்

கொட்டகலை, மார்ச் 16

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று அவசியம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற மகளிர் தினம் நிகழ்வில், கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில், கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *