உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி: இலங்கையில் ஏற்றம்

கொழும்பு, மார்ச் 16

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *