ஆயுத கொள்வனவில் தன்னிறைவை நோக்கி நகரும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வது 47 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம் உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் இறக்குமதி 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் 69 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *