பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: காத்தான்குடி SJB நகர சபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, குறித்த நகர சபை உறுப்பினருக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் (Guest House) பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நகர சபை உறுப்பினர், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply