அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு

அக்கரைப்பற்று, மார்ச் 16

அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் 2022 நடப்பு ஆண்டுக்கான கலாசார அதிகார சபையின் புதிய நிர்வாக தெரிவு, கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில், அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், பிரதம அதீதியாக கலந்துகொண்டு, நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்தார்.

அதனடிப்படையில், பதவி வழி தலைவராக ஐ.எல். றிஸ்வான், செயலாளராக அரச சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பி.நூறுல்லாஹ், பொருளாளராக ஊடகவியலாளர் ஏ.ஜி.ஏ. கபூர், பிரதித் தலைவராக எம்.ஏ.நஜிமுடின், உப செயலாளராக எழுகவி ஜெலீல் மற்றும் 06 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தம் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *