பாலையடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் களைகட்டிய தேரோட்டத் திருவிழா 

(   வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத் திருவிழாவின் தேரோட்டத் திருவிழா நேற்று  (14) திங்கள் கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

 திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்  தலைமையில், மகோற்சவ குரு சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஆண் பெண் பக்தர்கள் மழைக்கு மத்தியில் ” அரோஹரா” கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஐந்தொழில்களில் ” அழித்தல்” தொழிலை சுட்டி நிற்கும் தேரோட்டம் தொடர்பில் ஆன்மீக உணர்வாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா நேர்முக வர்ணனை நிகழ்த்தினார்.

இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 

சமுத்திர தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும்  இடம்பெற்றது என  ஆலய பரிபாலன சபைத் தலைவர் இரா.தவராசா  தெரிவித்தார்.

Leave a Reply