உளவியல் ஆலோசனை மய்யத்தின் நிருவாக சபை உறுப்பினர் நடராஜா கோபிநாத் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
உளவியல் ஆலோசனை மய்யமும் (PAC) , மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவுடன் இணைந்து இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பெருமளவானோர் பங்குபற்றி குருதித்தானம் வழங்கி இருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளருமான டாக்டர் இரா.முரளீஜ்வரன் அவர்களும் பங்குபற்றி இருந்தார்.










