அனோஜனின் விடுதலை தொடர்பாக கும்பத்தினர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். ; இன்று கொழும்பு சென்ற இவர்கள் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித்தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கான ஒழுங்குகளை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் ஏற்பாடு செய்திருந்தார்.
அவரின் முகப்புத்தக பதிவு வருமாறு
அனோஜனின் கும்பத்தினர் மற்றும் ஊரவர்களென 40ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கொழும்பிற்கு வந்துள்ளனர் அவர்களுக்கு தேவையான கூட்ட ஒழுங்குகளை நான் செய்திருந்தேன்.
காலையில் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது
பின்னர் சவுதி தூதுவராலயத்திற்கு சென்றோம் அங்கே கடிதம் கையளிப்பது பின்போடப்பட்டது
அந்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு வந்தது.
ஒரு மணியளவில் ஜனாதிபதியை நானும் குடும்ப உறுப்பினர்களும் சந்தித்து உரையாடினோம்.
அனோஜனின் விடுதலைக்காக முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நல்குவதாக அவர் உறுதியளித்தார்.





