சிவ ஶ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்களுக்கு சிவாச்சார்ய குருபட்டாபிஷேக நிகழ்வு!

சத்திஜோயாத சிவாச்சார்யார் சிவ ஶ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்களுக்கு சிவாச்சார்ய அபிஷேக நன்னீராட்டு விழா 17.09.2026 அன்று பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.
சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் பாண்டிரப்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பாண்டிருப்பு ஸ்ரீ சிவனாலயம் பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் நற்பிட்டிமுனை வேம்படி விநாயகர் ஆலயம் நாவிதன்வெளி வீ.சி.கிராம திருமுருகன் ஆலயம் நான்காம் கிராமம் சித்திவிநாயகர் ஆலயங்களின் பிரதம குருவாகவும் இறை பணி செய்கிறார்.

பிரதிஷ்டா பூசணம் சிவாகம கலாநிதி சொற்பொழிவு வேந்தன் குமார பிரபாகரக்குருக்கள் வழிகாட்டலில் அலங்காரத்திலகம் கிரியா பாஸ்கரன் சிவஸ்ரீ சு.சுதர்ஷன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரிய அபிஷேக நிகழ்வு இடம் பெற்று சத்திஜோயாத சிவாச்சாரியார் வழங்கப்பட்டது.

Leave a Reply