(மின்மினி மின்ஹா)
அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிகளிப்பு நிகழ்வு மற்றும் கலாசார நிகழ்வு மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசுலை மண்டபத்தில் வெற்றிகரமாக (20) நடைபெற்றது.
உஸ்வா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் – அஷ்- ஷெய் கு எம். எம். தெளபீக் (இஸ்லாஹி, BA, JP, DO) தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் , அவர்களின் திறமைகளை பராட்டும் வண்ணம் புரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றன.
இவ்விழாவில் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள் , கல்வியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்திருந்தனர்.






