இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் உலக மறைபரப்பு ஞாயிறு தினம் !

உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையால் ‘தேசிய மறைபரப்பு ஞாயிறு தினம்’ மிகவும் பக்தியுடனும் கோலாகலமாகவும் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1926 ஆம் ஆண்டு திருத்தந்தை 11-ஆம் பத்திநாதரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நாள், உலகெங்கிலும் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களது பணிகளுக்காகவும் செபிப்பதையும், தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்.

அந்தவகையில், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மறைபரப்பு ஞாயிறு தின நிகழ்வுகள் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றன.

விழாவின் முதன்மை நிகழ்வாகச் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைபரப்பு சந்தை (Mission Fair) மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆலயப் பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் சோசை அடிகளாரின் வழிகாட்டலிலும் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், பெருந்திரளான பங்குமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply