பட்டம் பெற சில நாட்களே இருந்த நிலையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்! கொழும்பை உலுக்கிய சம்பவம்

பட்டப்படிப்பை முடித்து புதிய வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு, கொழும்பில் நேர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.52 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற மாணவி மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர், பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான சக்குனி துவானி என்ற பொறியியல் பீட மாணவியாவார்.

இந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ள நிலையில், தலை மற்றும் மண்டையோட்டில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், தனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் மாணவி இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply