ஜன நாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பிளட்ச் றீஸ்ரோ பவுண்டேசன் நிதி அனுசரணையில் 10000 பனம் விதை நடுகைத் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜன நாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், கட்சியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி, ஒளிரும் சூரியன் பத்திரிகை நிர்வாகி வீ.சக்திவேல் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டி வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பனம் விதைகளை நடுகை செய்தனர்.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



