நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக மூதூர் பிரதேசத்தில் லங்கா சதொச நிறுனமின்றி, அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொது மக்கள் பொருட்களை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பிரதேசத்தில் கடந்த காலங்களில் இயங்கிக் கெண்டிருந்த லங்கா சதொச நிறுவனம் சில காலமாக எவ்வித காரணமும் இன்றி மூடப்பட்டு கிடக்கிறது.
இது பற்றி லங்கா சதொச நிறுவனத்திற்கு கட்டடம் வழங்கிய உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அரசாங்கத்தினால் 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் 3 வருடத்தின் பின் அதனை மீண்டும் ஒப்படைத்துச் சென்றதாக கட்டிட உரிமையாளர் முகம்மது ஜவாஹிர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட மக்கள் அதனை மீண்டும் மூதுாரில் அமைத்துத்தருமாறு உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே இப்பிரதேச பொது மக்களின் நலன் கருதி அரசாங்கத்தால் மீண்டும் மூதுாரில் லங்கா சதொச நிறுவனம் ஓன்றை அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.