விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா..!

வவுனியா ஈரட்டை பகுதியில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை மரணமடைந்திருந்தார்.

மேலும் குறித்த இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதன் முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரது சடலத்தினை எரியூட்டும் செயற்பாட்டினை சுகாதார தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply