‘அத்தியாவசிய சேவைகள்’ என பெயரிடப்பட்ட லொறியில் உரம் கடத்திய இருவர் கைது!

எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திற்கு 350 உரைப்பை மூடைகள் கொண்ட உரத்தை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தேகநபர்களை அம்பாறை மாவட்ட குற்ற விசாராணைப் பிரிவு பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

‘அத்தியாவசிய சேவைகள்’ என்ற பெயர் பலகை ஒட்டப்பட்ட லொறியிலேயே உர மூடைகள் கடத்தப்பட்டுள்ளன.

மேலும் அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கிராம் கொண்ட 350 உரப்பை மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், லொறியையும் அம்பாறை மாவட்ட குற்ற விசாராணைப் பிரிவு பொலிசார்  கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply