அடுத்த வாரம் முதல் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

டொலர் பற்றாக்குறை காரணமாக எரிவாயு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதனால் அடுத்த வாரம் முதல் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என எரிவாயு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதன.

லாப்ஸ் கேஸ்( laughs gas ) நான்கு கடன் கடிதங்களைத் திறக்கத் தயாராக இருந்தாலும், வணிக வங்கிகள் இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை.

லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையை 363 ரூபாவால் உயர்தியமையாமையால் பல்வேறு அளவுகளில் சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் தினசரி சந்தைக்கு வெளியிடப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதமாக எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் வெளியிடாததால் சுமார் 1.8 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த சிலிண்டர்களை நிரப்ப எரிவாயுவை விரைவாக இறக்குமதி செய்ய டொலர்கள் தேவை என்று எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 450 ரூபாவால் உயர்த்துமாறு நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை எரிவாயு நிறுவனம் நேற்று நிராகரித்தது.

எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதிக்காததால் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ .8 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *