யானை சேதமாக்கிய தனது வீட்டு மதிலை சிறுமி ஒருவர் பார்க்கின்றார்

பாறுக் ஷிஹான்

தனியன் காட்டு  யானை ஒன்று   ஊடுருவிய  நிலையில் சேதமாக்கிய தனது வீட்டு மதிலை சிறுமி ஒருவர் பார்க்கின்ற புகைப்படமே இதுவாகும்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை   காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்திலுள் இன்று(13)  அதிகாலை தனியன் காட்டு  யானை ஒன்றின்  அட்டகாசத்தினால் அங்குள்ள  வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி  பிரதேச மக்கள் கடும் பீதியில் வாழ்ந்து வருவதாக  தெரிவிக்கின்றனர்.இன்று ஒரு தனியன் யானை ஒன்றின்  அட்டகாசத்தினால் வாழை தென்னை முதலான பயிர்களை அதிகமாக சேதமாக்கியுள்ளதுடன் வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளமை குறிறப்பிடத்தக்கது.

Leave a Reply