இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குகின்றது சீனா!

<!–

இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குகின்றது சீனா! – Athavan News

இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையும் இந்த உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், அவ்வாறான உதவிகள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


Leave a Reply