புதிய அமைச்சர்கள் விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம்!- தேரர் எச்சரிக்கை

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம். ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம். 20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.- எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply