இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்தது – மன்சுக் மாண்டவியா

<!–

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்தது – மன்சுக் மாண்டவியா – Athavan News

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில், இந்தியாவில் வயது வந்தோரில் 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  188 கோடியை கடந்துள்ளதாகவும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply