வரிசையில் காத்திருந்த நபர் மயங்கி விழுந்து மரணம்

களுத்துறை,ஏப் 28

களுத்துறை வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த ஒருவர் வியாழக்கிழமை பிற்பகல் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பிற்பகல் 2.00 மணியளவில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக களுத்துறை வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார். இதன்போது திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து “1990” அம்பியூலன்ஸ் ஊடாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply