ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலகவேண்டும்! வேலணைப் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலகவேண்டும் என்ற பிரேரணை வேலணைப் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போது வேலணை பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆக ஒன்பது உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்ததும் இந்த நாட்டினுடைய அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் குறிப்பாக இந்த ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சிறுதேர் தியேட்டர் மின்சாரக் கட்டணம் இரண்டு கோடியை செலுத்தினாலே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஒரு தொகை நிதி ஏற்படும் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சபையின் உறுப்பினர்கள் இதனை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற கோரினர்.

இதனையடுத்து ஈபிடிபி மற்றும் பெரமுன கட்சியினர் இதனை அரசியல் செய்யாதீர்கள் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்கலாம் என்ற தோரணையில் சபையில் கருத்து தெரிவித்த நிலையில், அப்படி என்றால் வாக்கெடுப்பிற்கு விடுங்கள் எனவும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றுவதற்கு எதிராக வாக்களிப்பவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள் எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து இந்தத் தீர்மானத்தினை சபையின் உறுப்பினர் அருளானந்தன் ஸ்ரீ பத்மராசா முன்மொழிய சுவாமிநாதன் பிரகலாதன் வழிமொழிந்து நிலையில், இந்த நாட்டினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் ஏகமனதாக பதவி விலக வேண்டுமென தெரிவித்து சபையில் குறித்த தீர்மானத்தினை சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி வாசித்தார்.

குறிப்பாக இன்றைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கெடுத்து ஆட்சியில் இருந்து கொண்டு இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி அமைத்து இருக்கக்கூடிய வேலணை பிரதேச சபையில் இவ்வாறு ஏகமனதாக இந்த நாட்டினுடைய அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுத்தப்பட்டி அணிந்து வந்திருந்தும் குறிப்பிடத்தக்கது .

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எட்டு பேரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 6 உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினருமென மொத்தமாக 20 உறுப்பினர்களும் இந்த பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி இது அரசு விலக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னெடுத்து நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

A/L, O/L, தரம் 5 பரீட்சைகளிற்கான திகதிகள் அறிவிப்பு

சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியது காலிமுகத்திடல்

Leave a Reply