
மெராயா,ஏப் 28
லிந்துலை மெராயா பகுதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டுக்கு முன்னால் வியாழக்கிழமை பொதுமக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





