காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மக்களின் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் வகையில், நபரொருவர் செயற்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கோரி, காலிமுகத்திடலில் 20வது நாளாகவும் இன்று பெருந்திரளான மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த நபர், அங்குள்ள மக்களை குழப்பும் வகையில் அவர்கள்மீது தண்ணீர் போத்தல்களை வீசி எரிந்துள்ளார்.
இதை அவதானித்த மக்களை அவரை மடக்கி பிடித்து, அங்கு கடமையில் இருந்த பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும், மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் அழைத்து செல்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது.
அதாவது, பொலிசாரின் வாகனத்தில் எரிபொருள் இல்லாமையால் அவர் காலிமுகத்திடலில் உள்ள பொலிஸ் தற்காலிக கூடாரத்தில் வைத்து இருந்துள்ளனர்.







