ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

ஹப்புத்தளையில் இன்று (28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெருந்தோட்ட தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை நகர மையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் சுகவீனமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply