எரிபொருள் வரிசை மரணங்கள் இன்றுவரை தொடர்கிறது.

கடந்த முன்று மாதங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் பல தடவைகள் எரிபொருட்களுடன் கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்தாலும் இன்றுவரை எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களாக எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஐந்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற 63 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

குறித்த நபர் இன்று காலை 7 மணியளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளார். இந்நிலையில் மதியம் 1 மணியளவில் குறித்த நபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply