ராஜபக்ச அரசுக்கு பெரும்பான்மை பலமில்லை! நிச்சியம் நிரூபிப்போம் என்கிறார் ராஜித

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று அறிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

எனவே, ஜனாதிபதி பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசியல் நாம் அங்கம் வகிக்கமாட்டோம் .

இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் இல்லை. இதனை 4 ஆம் திகதி நிரூபிப்போம்.

மக்களுடன்தான் நாம் இருக்கின்றோம். அவர்களின் கோரிக்கைக்கு புறம்பாக முடிவுகள் எடுக்கப்படமாட்டாது – என்றார்.

Leave a Reply