இது மக்களுடன் மாத்திரமே ஒப்பந்தம் செய்யப்பட்ட போராட்டம்: சஜித்

கொழும்பு,ஏப் 28

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி வியாழக்கிழமை மூன்றாவது நாளாக கலிகமுவ பகுதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணியில் விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி  வேறு எவருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும், நாட்டின் 22 மில்லியன் மக்களுடன் மாத்திரமே  ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கலிகமுவ பகுதியில் வியாழக்கிழமை முற்பகல்  பேரணியை  ஆரம்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்

Leave a Reply