கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய ’மே’ தின நிகழ்வு!

சர்வதேச மேதின நிகழ்வுகள் இன்றைய தினம்(01.05.2022)கிளிநொச்சி  கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பமாகியது. கரடிப்போக்கு சந்தியிலிருந்து பேரணியாக நகர்ந்து பசுமைப்பூங்காவில் மாபெரும் மேதினக்கூட்டம் நடைபெற்றது.

இப்பேரணியில் தற்போதைய நிலை பற்றி பல்வேறு  சித்திகரிக்கப்பட்ட ஊர்திகள் பவனியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புபின் பிரமுகர்களான மாவை சேனாதிராசா, சி. சிறிதரன் ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் எம் .ஏ சுமந்திரன்  மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பொது அமைப்புக்கள், விவசாயிகள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *