ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!!

<!–

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!! – Athavan News

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply