கனடாவில் மற்றுமொரு துயரம் – மேலும் நான்கு உயிர்கள் பலி

கனேடிய இராணுவ கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் வாகன விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்திருந்த நிலையில், மற்றுமொரு விபத்து சம்பவம் தொடர்பான துயரமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, கனடாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒன்றாரியோவின் மாரத்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்ட பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *