அமெரிக்க புலனாய்வு தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நந்த் முல்சந்தனி நியமனம்

வாஷிங்டன்,மே 02

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்த் முல்சந்தனி நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான ‘சிஐஏ’ உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படுகிறது.

முல்சந்தானி முன்னதாக கடந்த காலங்களில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொலைத்தொடர்பு துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வரும் ‘சிலிக்கான் வேலி’ மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

மேலும், ஒப்லிக்ஸ், டிடெர்மினா, ஓபன்டிஎன்எஸ் மற்றும் ஸ்கேல்எக்ஸ்ட்ரீம் போன்ற பல வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

இந்த பொறுப்பில் சிஐஏ-இல் சேருவதில் நான் பெருமைப்படுகிறேன். சிஐஏ ஏஜென்சியின் நம்பமுடியாத தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் டொமைன் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அதன் வல்லுநர்கள் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்த உளவுத்துறையை வழங்கி வருகிறார்கள்…” என்று நந்த் முல்சந்தனி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *