தடுப்பூசி தொடர்பில் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு

கொழும்பு,மே 02

பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply