60 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை! போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்று முதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதி சேவையில் இருந்து விலகி செயற்பட்டுள்ளனர்.

அத்துடன், தாம் கோரிய 60 வீத கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறித்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து செலவுகளை மீளாய்வு செய்யத் தவறியமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *