ஹரின்- பொன்சேகா பகிரங்க சண்டை

கொழும்பு, மே 02

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் இடையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இவ்விருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தின் போதே இவ்வாறு இருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். அவ்விருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது அருகிலிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம், இருவரையும் விலகிவிட்டார்.

அத்துடன், மனுஷ நாணயக்கார எம்.பியும் ஓ​டோடிவந்து, தடுத்துள்ளார். கட்சியின் சிரேஷ்ட உப- தலைவர் என்றவகையில், தனக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமையை இட்டே, சரத் பொன்சேகா வினவியுள்ளார் என்றும், அதன்பின்னரே இவ்விருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *