சரத் பொன்சேகா – ஹரீன் பெர்ணான்டோ இடையே மோதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளமையானது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இருவரும் பொதுவெளியில் மோதிக்கொண்டனர்.

மே தினத்துக்கான ஏற்பாடுகளை ஹரின் பெர்ணான்டோவே மேற்கொண்டிருந்தார். பேச்சாளர்களுக்கான பெயர் பட்டியலில் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை.

இது தொடர்பில் ஹரினை அழைத்து, பொன்சேகா வினவியபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது சிறு மோதலாக மாறியது.

இருவரும் சபை நாகரீகம்மறந்து, கடும் வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனுச நாணயக்கார ஆகியோர் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *