
நாட்டில் உள்ள இளைஞர்களால் ,இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
நாட்டிலே இப்போது சரித்திரத்தில் இல்லாத நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
சுமார் 22 நாட்களுக்கு மேலாக கொழும்பிலே மக்கள் குழுமி இருக்கிறார்கள். ஜனாபதியே அவரின் செயலத்துக்கு உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே ஒரு சில சம்பவங்கள் தான் இப்படி நிகழ்ந்திருக்கிறது.போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் இங்கே வன்முறைக்கு இடமில்லை என்று ஆணித்தரமாக இருப்பதால், அரசு வன்முறையை பிரயோகிக்க முடியாமல் இருக்கிறது.
இது அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி.அன்று தந்தை செல்லவா வழியிலே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அன்றைய நிலையில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால் இப்போது அஹிம்சை வழியை சரியென நாமும் இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளோம்.ஆகவே இளைஞர்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை எந்த வேண்டும் என்றார்.

