சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகளால் விநியோக பணிகளுக்கு இடையூறு! எரிசக்தி அமைச்சர்

சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இதனால் துரிதகதியில் இடம்பெறும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது கிராமப் புறங்களுக்கு தொடருந்துகளில் கொண்டு செல்லப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும், டிப்போக்களுக்குத் தேவையான எரிபொருளை மட்டும் தொடருந்துகளில் கொண்டு செல்லவும் அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்க புதிய அறிவுறுத்தல்களை அமைச்சர் நேற்று வெளியிட்ட போதும் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் இன்றும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *