
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 24வது நாளை எட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நாட்டில் உள்ள பல உணவகங்கள் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்தடை போன்ற காரணங்களால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இதேவேளை உணவகங்களில் வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளளது.
இவ்வாறான நிலையில் நுவரெலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப்பொருளின் விலையை மைத்திரி -ரணில் ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய கோட்டபாயவின் ஆட்சியில் விற்பனையாகும் (2022) விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்துவருகின்றார்.

