
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, இந்திய மீனவர்களை பார்வையிடுவதற்காக யாழ். சிறைச்சாலைக்கு செய்துள்ளார்.
இன்றையதினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அண்ணாமலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார்.
அத்துடன் யாழில் மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இணைந்துகொண்டனர்.

