20 ஆவது திருத்தத்தை நீக்கி, 21ஐ கொண்டுவருவது தற்போதைய தேவைப்பாடு அல்ல! வஜிர அபேவர்தன

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலையில் 20ஆவது திருத்ததத்தை நீக்கிவிட்டு 21ஆவது திருத்தத்தை கொண்டுவருவது தற்போதைய நிலையில் முக்கியமல்ல என்றும் மக்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே மிகவும் முக்கியமானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

20 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 21 ஆவது திருத்தத்தை கொண்டுவருவது தற்போதைய நிலையில் முக்கியமானதல்ல.

நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே இவற்றை கிரமமான முறையில் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய தேவைப்படாக உள்ளது.

மக்கள் வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமாக தீர்க்க வேண்டும.

இல்லையேல் நாடு பேரழிவை எதிர்கொள்ளும். நாட்டுக்கு அவசர பொருளாதார தீர்வு தேவை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கெனவே அந்த தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply