கோட்டா கோ கம நடமாடும் மின் உற்பத்தி நிலையம் திறப்பு.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்கின்றது.
மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் பாராளுமன்றில் விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 24 நாள்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி ஆர்ப்பாட்டக் காரர்களால் ஆர்ப்பாட்டம்நடைபெறும் பகுதி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டா கோ கம பகுதியில் வைத்தியசாலை வசதி, நூலக வசதி, சட்ட உதவி வசதி, சர்வதேச ஊடக நிலையம், சூரிய சக்தி நிலையம், உணவகம் என பல்வேறு வசதிகளுடன் காணப்படுகின்றது.

இவ்வாறான கோட்டா கோ கம பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் நடமாடும் மின் உற்பத்தி நிலையமும் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லொறியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தின் திறன் 6 கிலோ வட் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *