மீண்டும் ஒன்றிணைந்த ஆளும்கட்சி – தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் !

ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *