இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை துரதிர்ஷ்டவசமானது! – கவலை வெளியிட்ட தூதுவர்

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையானது துரதிர்ஷ்ட வசமானது என இந்தியா, இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா மற்றும் விவசாய துறையினை மேம்படுத்துவதன் மூலம் நாடு மீண்டும் ஸ்திரத் தன்மையினை அடைய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க இலங்கைக்கு சென்றிருந்தபோது இலங்கை மிகவும் அழகான நாடாக இருந்ததாக தெரிவித்த தூதுவர் , இங்கு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளமையானது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மீண்டும் சிறந்த நிலைமையினை அடையுமென தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை அண்மைக் காலமாக சுமார் 51 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு கடனை மீளச் செலுத்தவில்லை எனவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply