தலவாக்கலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் லயன் தொடர் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

வேலு ராஜரட்ணம் (வயது – 50) இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், வீட்டார் அவரை தேடியிருந்தனர். அதன்போது வீட்டுக்கு பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *