யாழில் விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்த மாணவி தீ விபத்தில் சிக்கி பலி

யாழ், மே 02

பண்டைத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் தீவிபத்துக்குள்ளாகி தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன் சதுர்சியா (வயது 17) எனும் மாணவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்தில் ஒலிபெருக்கி சத்தம் அதிகமாக இருந்ததால் கதவை பூட்டி விட்டு அறையில் குறித்த சிறுமி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்திருக்கிறார். அச்சமயம் விளக்கு விழுந்து வீடு தீப்பற்றுகையில் சிறுமியின் ஆடையில் தீ பிடித்துள்ளது.

இதன்போது பஸ்ஸுக்காக தந்தையரால் சேமித்து வைக்கப்பட்ட பெற்றோலும் அறையில் காணப்பட்டுள்ளது. பெற்றோலும் தீப்பிடிக்கவே வீடு தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுமியை உடல் கருகிய நிலையில் மீட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் மகாஜனா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சுதன் சதுர்சியா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *